parthadhu, padithadhu, kettadhu, ninaithadhu...

Saturday, June 11, 2011

Pongal recipe?

Well, you may be wondering why this girl (?) is posting on such a simple dish. Yes, it is simple, esp. for those south Indians who prepares it year on year during the Pongal festival, aka Shankaranthi aka Harvest Festival (wow, hail english!). May be it is a bit different for the north Indians who think pongal as a very luxurious item with lots of cashew and ghee... ok ok ok... and yes who will forget the margazhi masam (december month).

Coming back to the point... Before going further, let me brief my buying habit - it is to always buy stuff from Spencers or Reliance. For quicker service, we have this Ambika departmental store which is close by my house. All the stuff will have the peculiar store smell. The pulses will be broken inside the packet, and could see worms slithering through. So max. I avoid buying stuff here. But on this fine day, my Moong dal box (the small yellow one that you add for Pongal) was air tight - just empty. In spite of making attempts to go to the main shop, was unable to really step into the big shot dept. stores. What the heck I keep doing for my b'fast. Idli, dosa, noodles, uppma... who will fill the place of pongal?? so I decided to step into my local Ambika stores. I took 500 gms of dal - two packets, bought few other stuff like maggie, ice cream, biscuits, etc. (yeah, i dont like to step into this shop, but if I did, I will ensure to spend at least a 100 he he he)

Next day, I was in bliss. Preparing pongal will not take much time at all. Take 1 cup of Rice and 1 cup of dal (some will put less dal, but it is good if you have this combination also. Will be tasty with good aroma), pressure cooke them with more than needed water so as to get the stuff quite mushy. Meanwhile chop 1 inch ginger piece into small pieces. Keep aside 1 teaspoon of pepper corns and 1 1/2 teaspoon of jeera. You will need 1 to 2 tablespoons of ghee for this quantity of rice and dal. Put ghee in a tawa - I prefer a non stick pan. When it gets heated, put chopped ginger, pepper corns and jeera. Let the pepper corn splutter (yeah it will, but not as good as mustard) Then transfer the rice+dal from cooker to this tawa. Mix well. Add 1 tspn of salt, few pinches of hing. Most of the people will not add hing, but do try. You can add 1/2 tablespoon of milk for enrichment - optional. If you want more spice, grind fresh pepper corns and sprinkle. Mix well. When serving, spread a teaspoon of ghee. (Tip - you can reduce the ghee originally put in the tawa and compensate it by spreading a teaspoon of ghee just at the time of serving. This way you can reduce the ghee consumption). Serve hot with chutney.

Few chutneys that I know (quantity will suffice liberally for two) -
a) Tomato chutney - take 2 to 3 big size tomato. wash well and grind it in mixie along with an inch of green chilly and pinch of salt. Season with mustard and pinch of urad dal fried in oil.

b) Coconut chutney - take at least 1/2 of the coconut shell. grate it. Grind in mixie along with an inch of green chilly and pinch of salt. Season with mustard and hing. You can add 2 teaspoons of of roasted gram (pottu kadalai in tamil) while grinding.

c) onion chutney - take 1 to 2 size onion. chop it roughly. heat a drop of oil in a tawa. add the onion and fry until the raw smell goes away. grind in mixie just like tomato chutney. season with mustard.

Alternatively you can grind the chutney and then put it in tawa and let the raw smell go.

d) combination chutney - you can make combinations of the above three together or two at a time. (Tomato + coconut or tomato + onion)

d) My favourite chutney - you can take a teaspoon of channa dal, 1 teaspoon of urad dal, liberal curry leaves. fry them well in
oil until they turn crispy. then add tomato and onion, and fry until the raw smell goes off. let it cool before you run into mixie along with chilli and pinch of salt. Add water if required. take a little bit of oil in a tawa. Add mustard and let it splutter. add 1/2 teaspoon of urad dal. Let it turn red. add a pinch of hing and turmeric powder. pour mixture in it. mix well. Let it boil until the oil separates.

e) Peanut chutney - another one which is not my usual but tried sometime last week was this. Take 1/2 tablespoon raw peanuts.
heat tawa with a spot of oil. put the peanut and roast it until the skin peels off. Add a red chilli with it. Allow it to cool. take a small quantity of tamarind and mix everything in a mixie. add salt. It came very nice but was having a sweet-ishness which my family did not like.

I do not like Mint so I never go for that. very rarely I try out corriander chutney but again with combinations with tomato.

OK back to my pongal thing. I did on the very day but the dal was not blending with the rice. the aroma also never came as I did it in tawa. I was surprised. I added a spoon of ghee, yet nothing. The dal looked as if they were not cooked properly. I wondered if I should have separately cooked it without adding in the rice. anyway I closed it. While eating we found it not at all good. it was not tasty at all. The dal kept smudging in our tounge. I thought it was me who has not prepared the dish well!!

The next day I cooked greens (araikeerai) along with the dal, yet the taste was not good. I cursed the shop and said you should never buy from here as the quality is very bad, it is not cooking, and look at the very color of the dal.. it is not yellow at all but white colored, etc.

The very next day I thought I will do carrot koottu and took the dal in a cup. Again I was cursing the color of the dal. That is when I noticed the title in the cover as "URAD DAL". Gosh...... so for 3 days I had been replacing urad dal instead of Moong dal. No wonder the pongal was a failure!!!

So should I tag this post as "Recipe of the month - how not to do Pongal"

Monday, October 4, 2010

அக்கரை பச்சை

வேகமாய் ஓடும் ரயிலில் இருந்து எட்டி பார்க்கிறேன்
தூரத்தில் தெரிந்தன ஒன்றிரண்டு வீடுகள்
சுற்றிலும் பச்சை பசுமையாய் வயல் வெளி
எனக்குள்ளே நினைத்து கொள்கிறேன்
'ஆட்களே இல்லாத இந்த அழகான ஊர்
ஆனால் எவ்வளவு நாட்களுக்கு?
இப்படி அக்கம் பக்கம் ஏதும் இல்லாமல்
எத்தனை பேர் தான் இப்படி இருக்கிறார்களோ?
என்ன தான் செய்து கொண்டிருப்பார்களோ?
சலித்து விடாதோ அவர்களுக்கு?'

****

எங்கள் கிராமத்து வீட்டினுள் தலை வைத்து படுத்திருக்கிறேன்
தண்டவாளத்தில் ரயில் வரும் அரவம் கேட்டது
எழுந்து நின்று வேடிக்கை பார்க்கிறேன்
எனக்குள்ளே நினைத்து கொள்கிறேன்
'வேகமாய் ஓடும் இந்த ரயிலுக்குள்
எத்தனை பேர் தான் இப்படி இருக்கிறார்களோ?
என்ன தான் செய்து கொண்டிருப்பார்களோ?
அப்படி எங்கே தான் போய்/வருகிறார்களோ?
சலித்து விடாதோ அவர்களுக்கு?'

Thursday, July 8, 2010

Initial Days

ச்ச... இந்த US-கு வந்து ஒரு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ள போர் அடிக்குது. வந்த புதுசுல நல்லா தான் இருந்தது. அப்போல்லாம் கார்ல வரும்போது எல்லா இடத்தையும் நல்ல தான் சொல்லிட்டு வந்தான் இந்த அருண். ஆனா அதுக்கப்புறம் என்னை எங்கியாவது வெளில கூட்டிட்டு போயிருப்பானா? அதிகமா போன இடம் இந்தியன் shop-ம், வால்மார்ட்-ம் தான். அதுவும் வீட்டுக்கு சாமான் வாங்க தான்! வெக்கத்தை விட்டு கேட்டாலும் ஏற இறங்க பாத்துட்டு "அப்புறம் போகலாம், எனக்கு வேலை இருக்கு" என்கிறான். அப்படி என்ன தான் வேலை இருக்குமோ... எப்ப பாரு கம்ப்யூட்டர்-ம் கையுமா தான் இருக்கான். இந்த பாழாப்போனவன் TV ஏதும் வாங்கல. அதனால கம்ப்யூட்டர்-ல தான் எதாவது படம் பாத்து பொழுது கழிக்க வேண்டி இருக்கு. அதுவும் இவன் இல்லாத போது தான்... இருக்கறச்சே தான் அவன் வேலை பாக்கறானே. friends எல்லாம் programs / சினிமா பத்தி கேக்கறச்சே அழுகையா வருது.
"ஊருக்கு போன் போட்டுதா அம்மாவோட பேசணும்"னா மொறைக்கிறான். "எல்லாம் அடுத்த வாரம் பேசிக்கலாம்" ங்கறான். அப்படி இப்படி பேசி போன் பண்ணி பேசும்போது அம்மா இவன பத்தி விசாரிச்சா மட்டும், 'ஆன்டி, ஆன்டி' னு நடிக்கிறான். எப்போ பாரு எதாவது சமைச்சி போட்டுட்டே இருக்கேன் இவனுக்கு. அதுவும் யாராவது வீட்டுக்கு வந்துட்ட போச்சு. நான் kitchen - ஏ கதி. அடங்க மாட்டேன் என்கிறான். காணாதத கண்ட மாதிரி எல்லாத்தையும் - எனக்கு மிச்சம் கிச்சம் வெக்காம, மனசாட்சியே இல்லாம திங்கறான். இதுல, 'சமையல் இன்னும் improve பண்ணு' என்கிறான். நானே இப்போ தான் வேற வழி இல்லாம சமைக்கறேன். அம்மாவோட கையால ஆசையா சாப்ட்டு வளந்த உடம்பு இது. அப்டி இப்டி, அம்மா வாங்கி தந்த book பாத்து, அம்மாக்கு போன் பேசறச்சே கேட்டு, friends , இன்டர்நெட் னு ஆராய்ச்சி பண்ணினு கஷ்ட பட்டு சமைக்கறேன், இவனுக்கு என்ன ஈஸியா சொல்லிட்டான். நான் வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணானு தெரியல.
தண்ணி வேற அடிக்கறான். வார கடைசி எல்லாம் ஒரே கூத்து தான். ஊர்ல இருந்தப்போ இப்டி இல்ல. தண்ணி போட்டு, கண்ட படி பேசிகிட்டு, ச்ச... அதுவும் ராத்திரி வந்தா அம்மா.. என்ன கொடுமை... bend நிமிருது எனக்கு. இவன் துணியையும் சேத்து நான் லாண்டரி போட்டு, iron பண்ணி வக்கிறேன். வீடு தொடச்சி, பாத்ரூம் clean பண்ணின்னு... ச்ச! என்ன வாழ்கை இது!

மவனே, H1 விசா ல வந்து ஏதோ தெரிஞ்சவனாச்சேனு உன் கூட இருந்தா, இப்படியா பொம்பள பிள்ளை மாதிரி எல்லா வேலையும் வாங்குவ... நான் என்ன உன்ன கல்யாணம் பண்ணின பொண்டாட்டியா.. இல்ல சம்பளமில்லாத வேலைக்காரனா... இருடீ.. எனக்கு நேத்து வேலைக்கு interview call வந்து நான் select -m ஆகிட்டேன். அடுத்த வாரம் நான் என்னோட சொந்த கால்-ல நின்னுகறேன். அப்போ நீயுமாச்சு உன் friendship -ம் ஆச்சு, குட் பை சொல்லல.. என் பேரு வசந்த் இல்ல.
BTW நைட் bend நிமித்துரானு எத சொன்னேன்னா... அவன் வாந்தி எடுத்து அத துடைச்சி, carpet -எ vaccum போட்டு.. அத தான் சொன்னேன். நீங்க என்னடானா... உங்க கற்பனைக்கு அளவே இல்ல!

Tuesday, February 16, 2010

டைம் ஆகுதே, ஐயோ...

i started this blog quite sometime back but am too lazy to write a new post altogether. but still wanted to open the shop. so here we go... one of my previous write-up.

வெய்யிலில் கட கடவென நடந்தேன். 9:30 க்கு பஸ் ஸ்டாண்ட் போய் விட வேண்டும். at least 10 மணிக்கு... என வேலைகளை plan செய்து வைத்திருந்தேன். ஆனால் இப்போதே மணி 10:15 ஆகி விட்டது. bus பிடித்து office சென்று சீட்டில் அமர 11 ஆகி விடும். ச்சே.. என்னை நானே நொந்து கொண்டேன். நானும் என் ப்ளான்னிங்கும்! ஒரு நாள் வண்டி இல்லன்னா ரொம்போவே பட வேண்டி இருக்கே. இந்த மதன் வேற... கொஞ்சம் கூட help பண்ணவே மாட்டான். evening ஊருக்கு போகணும், அதால வண்டி எடுக்கல. துணி மணி எல்லாம் அம்மா வீட்டுக்கு போய்டுச்சு. கிருதி கூட அம்மா வீட்ல இருக்கா. evening அம்மா வீட்லேந்து நேரா கிளம்பிடலாம். கிருதி குட்டிக்கு ஒரு shoe வாங்கிட்டு வரணும். இந்த chappal ரொம்போ பழசாயிடுச்சு. கேமரா எடுத்து வச்சானா மது, தெரியலியே... இப்படியெல்லாம் எண்ணங்கள் போய் கொண்டு இருந்த நேரம், என்னவோ மிக அருகில் சப்தம் வந்தது.

திரும்பி பார்த்தால், அருகில் ஒரு ஆள் நின்று கொண்டு இருந்தான். பார்க்க பைத்தியம் போல எல்லாம் இல்லை, நன்றாக தான் இருந்தான். நான் திரும்பி நடந்து அவனை ஓர கண்ணால் கவனித்தேன். அவன் என் பின்னாலயே follow செய்தான். இது என்னடா வம்பு என வேகமாக நடந்தேன். அவனும் வேகமாக நடந்தான். இந்த மாதிரி ஆசாமிகளுக்காக தான் இன்று வண்டி இல்லை என்ற உடனே ஜீன்ஸ்-ஐ மாற்றி சுரிதாரில் வந்து இருக்கிறேன். அதுவும் துப்பட்டா எல்லாம் ஒழுங்காக தான் இருக்கிறது, பின்ன ஏன் இப்படி செய்கிறான். ஏதோ எனக்கு புரியாத வார்த்தைகளை சப்தமாக சொல்லி கொண்டு வேறு வந்தான். நான் ஓடினால் அவனும் ஓடினான். நான் வளைந்து நடந்தால், அவனும் வளைந்து நடந்தான். நான் பிள்ளையரை பார்த்து கும்பிட்டால் அவனும் பி.பா.கு. நான் ஒரு கல்லை தாவினேன், அவனும் அந்த க.தா. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இன்னும் 2 அடி வைத்து road cross செய்தல் bus stand வந்து விடும். சட்டென்று நின்று திரும்பி அவனை பார்த்தேன். அவனும் நின்றன். திரும்பி நடந்தேன், அவனும் தி.ந. உடனே sudden பிரேக் pottu அவனை 'hello mister என்ன வேணும் உங்களுக்கு..' என்று சொல்லிய படியே நடந்தேன். சுத்தி இருந்த அனைவரும் என்னையே பார்த்தனர். அவனை சட்டென்று காணவில்லை. அப்படா விட்டது தொல்லை என்று bus ஸ்டாண்ட்-இல் நின்று கொண்டு இருந்தேன்.

ஒரு bus வந்தது. yellow board, என் stopping ல் நிற்காது. ச! அடுத்து வந்தது white board, அனாலும் என் stopping நிற்காதாம். அடுத்து இரண்டு M series bus வந்தது. கண்டிப்பாக stopping-கே இல்லை என்றாலும் நிற்கும். முதலாவது நல்ல கூட்டம். அடுத்தது ok. சரி என்று அதில் தொற்றி கொள்ள போகும் நேரத்தில், அதில் footboard அடிக்கும் college பையன்கள், பஸ்-ல் ஏற எத்தனித்த எல்லோரிடமும், "இந்த பஸ் பிரேக் சரி இல்ல.... நின்னு நின்னு போகுது... slowa போகுது.. stoppingla பிரேக் புடிச்ச அடுத்த stopping போய் நிக்குது, ஏறாதீங்க" என்று அக்கறையாக சொல்லி கொண்டு இருந்தனர். எனக்கு ஏற்கெனெவே time ஆகி விட்டது. இவ்ளோ பிரச்னை இருந்தால் ஏன் conductor-driver வண்டி ஓட்டனும. இந்த college பசங்க ஏன் இன்னமும் busla நிக்கனும்னு எனக்குள்ள plus minus போட்டு பார்த்து, சட்டென்று ஏறி விட்டேன். ஏறின உடனே நல்லவேளை seat கிடைத்தது.. மேலும் சில பேர் ஏறி கொண்டதும், வண்டி நகர்ந்தது.

வண்டி மெதுவாக தான் சென்றது. இன்னும் 20-30 நிமிஷம் பஸ் பயணம். கொஞ்சம் நிம்மதியா இருப்போம் என்று நினைத்து கொண்டே, thirumbi "ஒரு spic வாங்குங்க" என டிக்கெட் pass செய்த வேளையில் சட்டென்று என் மடியில் கனம் வந்தது. என்னடா என்று திரும்பி பார்த்தால், யாரோ அடிடாஸ் bag போன்று ஒன்றை என் மடியில் வைத்து இருந்தார்கள். கூட்டமும் அவ்வளாக இல்லை, பின் ஏனிப்படி என்று நினைத்து கொண்டு இருக்கையில் "இந்தாமா ticket" என்று ticket வந்தது. சரி போனால் போகட்டும் என்று அந்த பாகை மடியில் வைத்து கொண்டேன்.

அந்த பைக்கு ஜிப் இருந்தும் மூடாமல் இருந்தது. மூட முடியாதபடி ஜிப் பிசகி இருந்தது. உள்ளே ஒரு அழுக்கு வேஷ்டியும் நிறைய அரிசிகளும் தென்பட்டது. அதை தூக்கி சரியாக வைத்த போது எதுவோ ஒன்று ஆடியது. அது வரையில் இல்லாத கிலி சட்டென்று என்னை ஆட்கொண்டது. ஹய்யயோஒ... ஊர் முழுக்க குண்டு வெடிச்சிட்டு இருக்கு, இப்ப என்னடானா என் மடிலயே சந்தேகமா ஒரு பை இருக்கு.. ஒரு வேளை.. ஒரு வேளை.. இதுலேயும் குண்டு இருந்தா... ஹய்யயோ.. முருகா... என்ன காப்பாத்து, இது என்ன வம்பா போச்சு என்று நினைத்து பையின் சொந்தகாரனை நிமிர்ந்து அப்போது தான் பார்த்தேன். பார்த்தும் உறைந்தேன். அவன்...

பார்க்க உயரமாக, மாநிறமாக, குளியல் என்றால் என்ன என்றே தெரியாமல் அழுக்காக இருந்தான். அதெல்லாம் விட, அவனுக்கு ஒரு கண் தான் இருந்தது. இன்னொன்று மூடியவாறு, permanent disabilityai அறிவித்தது. பார்த்தவுடன் எவரும் பயப்படுவர். குழந்தைக்கு பூச்சாண்டி காட்ட இவன் மிகவும் பயன் படுவன். அஹா... ராஜீவ் காந்திய கொன்ற சிவராசன் கூட ஒத்தை கண்ணன் தான் என்று தேவை இல்லாமல் தகவல் தந்தது மூளை. போச்சுடா.. இன்றே கடைசி போல இருக்கு என்று ஒரு கிலி என்னை பற்றி கொண்டது.

என்னை சுற்றி ஒரு தரம் பார்த்தேன். எல்லாரும் அவரவர் உலகத்தில் இருந்தனர். சிலர் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு, சிலர் பெண்கள் உட்காரும் பக்கம் பார்த்து கொண்டு, பலர் cell phoneil பேசி கொண்டு, சிலர் மௌனமாக உள்ளுக்குள் அழுது கொண்டு, சிலர் பேசி கொண்டு, விளையாடி கொண்டு, டிரைவர் வண்டி ஒட்டி கொண்டு என எல்லாரும் ஒரு கொண்டு வில் இருந்தனர். ஆனால் நான்... பயத்தில் உறைந்து இருந்தேன்,. அவன்.. பயங்கரமாக இருந்தான். அய்யய்யோ இறைவா என்னை காப்பாற்று .. இந்த பைல குண்டு இருக்க கூடாது. உனக்கு 10 தேங்காய் உடைக்கறேன் பிள்ளயரப்பா என bus சட்டென்று பிள்ளையார் கோவிலை pass செய்த போது வேண்டி கொண்டேன். கடவுளுக்கு லஞ்சமா... hmm...

இந்த மதுவால தான் எல்லாம். என்ன ஒரு நிமிஷம் officela கொண்டு விட்ருக்கலாம். busla போய்க்கோனு போய்ட்டான் என்று மது மேல் பழியை போட்டேன், வழக்கம் போல். இந்த மது என்ன செய்யவன்.... நான் இல்லைன்னு சந்தோஷமா இன்னொரு கல்யாணம் பன்னிப்பானா.. இல்ல ஐயோ என் பொண்டாட்டின்னு அழுவானா... ஹய்யோ என் பொண்ண யார் பார்த்துப்பா.. எப்படி வளப்பா.. அம்மா தான் வழக்கம் போல பாத்துகணும். அவள ஒரு டாக்டர் ஆக்கிடுங்க நு அம்மா கிட்ட சொல்லவே இல்லையே.. மது பாத்துப்பாநா இல்லை எனக்கென வந்ததுனு iruppana.. அவளுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி கொடுக்கற வரைக்கும் அம்மாவால இருக்கா முடியுமா? இப்போ தான் 2 வயசகறது... futurela கிருதிக்கு ஏன் நியாபகமே இருக்காதே. cinema மாதிரி "மன்னவனே அழலாமா" nu மதுவை torture பண்ணுவேனா... அருமையா போயிட்டு இருக்கே என் life.. இப்படி அல்ப்பாயுசுல போயிடுவேன்.. என்று மனதுக்குள் புலம்பினேன்.

எங்கே அசைந்தால் குண்டு வெடித்து விடுமோ என்ற பயத்தில் ஆடாமல் அசங்காமல் உட்கார்ந்தேன். பஸ் குலுங்கும் போதெல்லாம் கலவரம் ஆனேன். ஊருக்கு டிக்கெட் எல்லாம் புக் பண்ணி இருக்கேனே... எப்படி எல்லாம் இந்த 3 நாள் leaveai கொண்டாடனும்னு நெனச்சேன்.. எவ்ளோ நாள் கழிச்சு லீவ் கெடச்சிருக்கு, அதெல்லாம் போயிடும் போல இருக்கே.. பக்கத்தில் ஒரு சின்ன பையன் தன் அம்மாவின் மடியில் அவள் சேலை தலைப்பில் ஒளிந்து கொண்டு இருந்தான். பார்த்தால் காய்ச்சல் வந்தவன் போல இருந்தான். ஹய்யோ இந்த சின்ன குழந்தை கூட செத்துடுமே.. இறைவா.. என்ன சோதனை! அந்த college பசங்க எல்லாம் செத்துடுவங்களே... அப்பவே சொன்னாங்களே இந்த பஸ்ல ஏற வேணாம்னு ... அது கடவுள் நமக்கு சொன்ன செய்தியா... யார் யார் மனசுல என்ன இருக்கோ, யார் இருக்காங்களோ, எல்லாரும் கூண்டோட கைலாசம் போயுடுவோமே... சில்லரை இல்லன்னு எரிஞ்சி விழாத conductor, கடவுள் அங்க உன் சில்லறையெல்லாம் எண்ணிகிட்டு இருப்பாரு ...

வேறு யாரும் இதை கையில் வைத்து கொண்டு இருந்து வெடித்தல் atleast நம்ம முகமாவது ஒழுங்கா தெரியும். என் மடியிலே வெடித்தால், சரியா தெரியாதே.. எப்படி அடையாளம் கண்டுபாங்க நான் தான்னு... என்று தோணியது. இந்த bus வேற இவ்வளோ slowa போறது ச்சே... பெரிய size கோயில் வந்தால் கூட கண்டுக்காத நான் அப்போது பாடிகட் முனிஸ்வரன் கோவிலை கூட விட்டு வைக்க வில்லை. முனிச்வர, என்னை காப்பாற்று என கும்பிட்டு வைத்தேன். பேசாம அடுத்த stoppingla இறங்கி வேற bus புடிக்கலமா.. hmm.. ஏற்கெனெவே டைம் ஆகிடுது.. அத்தோட இப்படி அருமையா உக்கார இடம் கிடைக்குமா.. அட ச.. lifeae ஊஞ்சல் ஆடுது, என்ன இப்படி யோசிக்கற என்று என் மனதுக்குள்ள ஏஞ்சல்ஸ் அண்ட் டெமொன்ஸ் சண்டை போட்டு கொண்டு இருந்தது.

இன்னும் 10 minutes இருக்கே என் stopping வர.. ஹய்யோ இறைவா.. spic வர வரைக்கும் வெடிக்க விடதயேன். ச்சே என்ன இப்டி selfisha இருக்கே.. மறுபடியும் angels and demons. hayyo, லைப்ரரி புக்ஸ் வேற திருப்பி கொடுக்கணுமே என்று பொறுப்பாக யோசித்து என்னுள் இருக்கும் அங்கெல். வாழ்க! காலையில் என்னை follow செய்த ஆசாமி - அந்த incident வேறு வந்து குழப்பியது. ஒவ்வொரு நொடியும் செத்து கொண்டு இருந்தேன். conductor இடம் சொல்லலாமா.. ச்சே ரொம்போ டூ மச்ஒ? செரி எங்கே அந்த ஆள், அவனிடமே இதை கொடுத்து விடலாம் என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தால்.... பார்த்தால்... அந்த ஆளை காணவில்லை.

எனக்கு அழுகையாக வந்தது. சுற்று முற்றும் பார்த்தாலும் காணவில்லை. செரி பேசாமல் கண்டக்டர் இடம் சொல்லி இந்த பைய்யை தூக்கி போட சொல்ல வேண்டியது தான். மதுவாக இருந்தால், இந்த பைய்யை எப்போதோ தூக்கி வெளியே போட்டு இருப்பான். அவன் தைரியசாலி. சரி இன்னும் 1 stopping தான் என்று திடபடுத்தி உட்கார்ந்தேன். bus கிளம்பியதும் எழுந்து விடுவோம் என எண்ணி இந்த பை என குரல் கொடுத்தேன். எனக்கு பின்னால் இருந்த seatil இருந்து கொடும்மா என soft குரல் கேட்டது. திரும்பி பார்த்தால்... அந்த ஒ.க. அங்கே உட்கார்ந்து இருந்தான். ஒரு பக்கம் வெட்கம், ஒரு பக்கம் கோவம், ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் அதிர்ச்சி என என் மனதுக்குள் ஜுகல்பந்தியே நடந்தது. . கோவமாக இந்தாங்க உங்க bag, உக்காந்த வுடனே வாங்கிட்டு இருக்கலாம் இல்லை என முறைத்து கோவமாக சொன்னேன். வெட்கமாக புன்னகைதான் ஒ.க. போடாங்... என மனதுக்குள் கருவியபடியே busai விட்டு இறங்கினேன். bus போனதும் சுகமான கற்றை சுவாசித்தேன். மணி 10:40 தன் ஆகி இருந்தது. பரவில்லை!

Followers